Google search engine
Home 2024 May

Monthly Archives: May 2024

ஜூன் 4 வாக்கு எண்ணும் பணியில் 38,500 பேர்: ஒவ்வொரு மேஜையிலும் தனித்தனியாக வீடியோ பதிவு

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை பணியில் நுண் பார்வையாளர்கள் 4,500 பேர் உட்பட 38,500-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு எண்ணும் பணி தனித்தனியாக வீடியோவில் பதிவு செய்யப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், முதல் கட்டமாக கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற்றது. இதுவரை 6 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், இறுதி கட்டமாக 7-வது கட்ட வாக்குப்பதிவு வரும் ஜூன்...

பிரதமர் மோடி 30-ம் தேதி கன்னியாகுமரி வருகை: 3 நாள் தியானம் செய்கிறார்

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், பிரதமர் மோடி வரும் 30-ம் தேதி கன்னியாகுமரிக்கு வருகிறார். அங்குள்ள விவேகானந்தர் பாறையில் 3 நாட்கள் தியானம் மேற்கொள்கிறார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இறுதி கட்ட தேர்தல் வரும் ஜூன் 1-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாக உள்ளன. இந்நிலையில், பிரதமர் மோடி வரும் 30-ம் தேதி கன்னியாகுமரி வருகிறார். டெல்லியில் இருந்து விமானத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரம்...

பழங்கால ஓலைச்சுவடிகள், செப்பு பட்டயங்கள், ஏடுகளை பாதுகாக்க ஆய்வு மையம்: பணிகளை தொடங்கிய அறநிலையத் துறை

கோயில்களில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால ஓலைச்சுவடிகள், செப்புப் பட்டயங்கள், ஏடுகளை பாதுகாக்கும் வகையில் ஆய்வு மையம் அமைக்கும் பணியை இந்து சமய அறநிலையத் துறை தொடங்கி உள்ளது. பணிகள் நிறைவு பெற்ற பிறகு, பழங்கால ஓலைச்சுவடிகள், செப்புப் பட்டயங்கள், ஏடுகளை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடவும் திட்டமிடப்பட்டு வருகிறது. பண்டைய காலத்தில் முன்னோர்கள் காகிதப் பயன்பாடு வருவதற்குமுன் பனை ஓலைகளையே பதிவுத்தாள்களாக பயன்படுத்தியுள்ளனர். அந்த ஓலைச்சுவடிகளில் கோயில்கள் பற்றிய விவரங்கள், வரலாறு, மன்னர்கள் குறித்த பல்வேறு தகவல்கள் இடம்பெற்றிருந்தன. அக்காலத்தில் அன்றாடம் நடைபெற்ற கோயில் நிர்வாகம், வரவுசெலவு விவரம்,...

குருப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குருப்-4 தேர்வில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு, ஜூன் 9-ம் தேதி காலை நடைபெற உள்ளது. விண்ணப்பதார்களின் அனுமதிச் சீட்டுகள் (ஹால்டிக்கெட்) www.tnpscgov.in, www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (ஓடிஆர்) மூலமாக விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

பிறவியிலேயே முகத் தாடை குறைபாடுள்ள குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை: ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை – அகில பாரத மகிளா சேவா சமாஜ் ஒப்பந்தம்

பிறவியிலேயே உதடு அண்ணப்பிளவு, முகத் தாடை குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க அகில பாரத மகிளா சேவா சமாஜத்துடன் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை ஒப்பந்தம் செய்துள்ளது. இதுகுறித்து போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டசெய்திக் குறிப்பு: பிறவியிலேயே உதடு அண்ணப்பிளவு மற்றும் பிற முகதாடை குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு அறுவை உள்ளிட்ட சிகிச்சைகளை இலவசமாக வழங்க சென்னை போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், அகில பாரத மகிளா சேவா சமாஜத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி,...

38 வயது, 17-வது ஐபிஎல் சீசன்… மிளிரும் தினேஷ் கார்த்திக்!

தோனி என்ற ஒரு நிகழ்வு இந்திய கிரிக்கெட்டில் ஏற்படவில்லை எனில் தினேஷ் கார்த்திக் என்ற ஒரு நுண் திறன் படைத்த வீரர், தலைமைத்துவத்திற்கான அருமையான மூளை கொண்டவர், எத்தனைப் போட்டிகளில் இந்தியாவுக்காக ஆடியிருப்பார் என்று நினைத்துப் பார்க்கும் போது தினேஷ் கார்த்திக்கை நினைத்து வருந்தாமல் இருக்க முடியாது. ஐபிஎல் 2024 சீசனில் ஆர்சிபி வெளியேறியது. தினேஷ் கார்த்திக் இந்த சீசனில் 13 இன்னிங்ஸ்களில் 326 ரன்களை 187.35 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார். பவர் ப்ளேயில் ஆடி 741 ரன்கள் எடுத்த விராட் கோலியின்...

ஆர்சிபி தோல்வி எதிரொலி: சமூக வலைதளங்களை சுனாமி போல சூழ்ந்த மீம்ஸ்!

நேற்றைய போட்டியில் ஆர்சிபி தோல்வி அடைந்த பிறகு அந்த அணியை ட்ரோல் செய்யும் மீம்கள் சமூக வலைதளங்களை சுனாமி போல ஆக்கிரமித்துள்ளன ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆர்சிபி அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. முன்னதாக பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஆர்சிபி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. இந்த போட்டியின் போது சிஎஸ்கே ரசிகர்களை நோக்கி விராட் கோலி...

கேஜ்ரிவாலின் வயதான பெற்றோரை அலைக்கழிப்பதா? – மத்திய அரசு மீது டெல்லி அமைச்சர் ஆதிஷி குற்றச்சாட்டு

ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக அர்விந்த் கேஜ்ரிவாலின் பெற்றோர் மற்றும் மனைவியிடம் டெல்லி போலீஸ் குறுக்கு விசாரணை நடத்துவது பற்றி டெல்லிபோலீஸ் தரப்பு கூறியதாவது: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் தனி செயலர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மலிவால் அளித்த புகாரின் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னதாக தான் கேஜ்ரிவாலின் பெற்றோர் மற்றும் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்ததாக ஸ்வாதி மலிவால் விசாரணையில் தெரிவித்தார். ஆகவேதான் அவர்களிடம் விசாரணை நடத்த டெல்லி...

முல்லை பெரியாறில் புதிய அணை: பழைய அணையை இடிக்க மத்திய அரசிடம் அனுமதி கோரும் கேரள அரசு

முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு, புதிய அணையை கட்ட அனுமதி கோரி மத்திய அரசிடம் கேரள அரசு விண்ணப்பித்து உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கி மேற்கு நோக்கி பாயும் பெரியாறு அரபிக் கடலில் கலக்கிறது. இந்த ஆற்றின் நீரை கிழக்கு நோக்கி திருப்பி தமிழ்நாட்டின் தென்மாவட்டங்கள் பயன் அடைவதற்காக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கடந்த 1893-ம் ஆண்டில் முல்லை பெரியாறு அணை கட்டப்பட்டது. இந்த அணையின் கொள்ளளவு 15.5 டிஎம்சி ஆகும். இதன் உயரம் 155 அடி ஆகும். கேரளஎல்லைப் பகுதியான இடுக்கி...

“பிரஜ்வல் வழக்கில் ஒத்துழைக்கவில்லை” – மத்திய அரசு மீது க‌ர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் புகார்

பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என க‌ர்நாடக உள்துறை அமைச்சர் ப‌ரமேஸ்வர் தெரிவித்தார். முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் ஆபாச‌ வீடியோக்கள் கடந்த 26-ம் தேதி வெளியானது. அவரது வீட்டு பணிப்பெண், மஜத முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 4 பேர் பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்தனர். இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார், அவர்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

பொதுமக்களுடன் கஞ்சி குடித்த திமுக வேட்பாளர்

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆஸ்டின், புனித வெள்ளியை முன்னிட்டு நாகர்கோவிலில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகே பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட கஞ்சியை அவர்களுடன் வரிசையில் நின்று வாங்கி அருந்தினார். இந்த நிகழ்வில்...

விளவங்கோட்டில் பாஜக சார்பில் களமிறங்கும் விஜயதரணி

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 27 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி நாகர்கோவில் தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குளச்சலில் டி.சிவக்குமார், பத்மநாபபுரத்தில்...

குமரி: 3 தொகுதியில் களம் இறங்கும் காங்கிரஸ் வேட்பாளர்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 27 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் இன்று (ஏப்ரல் 3) வெளியாகியுள்ளது. அதன்படி குமரி மாவட்டம்  கிள்ளியூர் தொகுதியில் ராஜேஷ்குமார் போட்டியிடுகிறார். அதே போல்...