ஈரான் பிரச்சினைக்கு தீர்வு என்ன? – ஐ.நா. சபை கூட்டத்​தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து

0
17

இந்தியா – மத்திய கிழக்கு – ஐரோப்பா பொருளாதார வழித்​தடம் ஈரான் பிரச்​சினையைத் தீர்க்க உதவும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார்.

ஐ.நா. சபை கூட்​டத் தொடர் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. இதன் ஒரு பகு​தி​யாக வளை​குடா ஒத்​துழைப்பு கவுன்​சில் கூட்​டம் நடை​பெற்​றது. அதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசி​ய​தாவது: அண்டை நாடு​களுக்​குச் சொந்​த​மான வர்த்​தகக் கப்​பல்​கள் மீது ஈரான் தீவிர​வாதத் தாக்​குதல்​களை நடத்​தி​யது. இதனால், மத்​திய கிழக்கு நாடு​களின் எரிசக்தி உள்​கட்​டமைப்பை ஈரான் சோதனைச் சாவடிகளி​லிருந்து மாற்ற வேண்​டிய அவசி​யம் ஏற்பட்டுள்​ளது.

இதனால்​தான் எங்​களது அமெரிக்க நிர்​வாகம், இந்​தியா – மத்​திய கிழக்கு -ஐரோப்பா பொருளா​தார வழித்​தடத்​தை​யும், குழாய் வழியாகவோ அல்​லது வேறு வழி​யாகவோ கச்சா எண்​ணெய்யை வெளியே கொண்டு செல்​வதற்​கான வழிகளை​யும் வலு​வாக ஆதரிக்​கிறது. 10 ஆண்​டு​களுக்​கும் மேலாக இந்​தப் பிராந்தியத்தைப் ஆட்​டிப் படைத்து வரும் சவால்​களை நாம் அனை​வரும் ஒன்றிணைந்து கடந்து செல்​லும் தரு​வா​யில் நாம் இருக்​கிறோம். ஈரான் பிரச்​சினையைத் தீர்க்க இது ஒன்​று​தான் தீர்வாக இருக்​கும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

இந்​தி​யா-மத்​திய கிழக்​கு-ஐரோப்பா பொருளா​தார வழித்​தடம் என்​பது, 2023-ம் ஆண்டு செப்​டம்​பரில் டெல்​லி​யில் நடை​பெற்ற ஜி 20 உச்சி மாநாட்​டின்​போது அதி​காரப்​பூர்​வ​மாக வெளி​யிடப்​பட்ட ஒரு பன்​னாட்​டு உள்​கட்​டமைப்​புத் திட்​ட​மாகும். இந்த வழித்​தடம், இந்​தி​யாவை வளை​குடா நாடு​களு​டன் இணைக்​கும் ஒரு கிழக்கு வழித்​தடத்​தை​யும், வளை​குடா நாடு​களை ஐரோப்​பாவுடன் இணைக்​கும் ஒரு வடக்கு வழித்​தடத்​தை​யும் உள்​ளடக்​கிய​தாகும் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

பத்​திரி​கை​யாளர் மீது கோபம்

சில செய்தி நிறு​வனங்​கள் தன்​னைப் பற்​றி​யும், அமைச்​சரவை சகாக்​களைப் பற்​றி​யும் தவறான அல்​லது கற்​பனை​யான தகவல்களைப் பரப்பி வரு​வ​தாகக் கூறி, பொலிடிகோ, சிஎன்​என், எம்​எஸ் நவ் ஆகிய செய்தி ஊடகங்​கள் வெள்ளை மாளி​கைக்​குள் நுழைய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமீபத்​தில் தடை விதித்​தார். இந்நிலையில், நேற்று முன்​தினம் நடை​பெற்ற ஐ.நா. சபை கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பங்​கேற்​றார்.

அப்​போது செய்​தி​யாளர்​கள் அவரை சூழ்ந்து கொண்​டனர். இந்நிலை​யில், சிஎன்​என் செய்​தி​யாளரைப் பார்த்​ததும் ட்ரம்ப் கோபமடைந்​தார். அவர் கூறும்​போது, “சிஎன்​என் செய்​தி​யாளர் இங்கு வந்து என்​னைப் பற்றி செய்தி சேகரிப்​பது ஆச்​சரிய​மாக இருக்​கிறது. நீங்​கள் இங்​கே இருக்​கக்​கூ​டாது” எனக்​ கோபமாகக் குறிப்பிட்டார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here