குழித்துறை ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் இல்லாத நிலை இருந்து வருவதாக புகார் உள்ளது. இது குறித்து விளவங்கோடு எம்எல்ஏ தாரகை கத்பட்டிடம் பொதுமக்கள் புகார் செய்தனர். தொடர்ந்து நேற்று எம்எல்ஏ குழித்துறை ரயில் நிலையம் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அங்குள்ள ரயில்வே அதிகாரிகளை தொடர்புகொண்டு, இரண்டு டிக்கெட் கவுண்டர்கள் செயல்படவும், வெயிட்டிங் அறைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவருடன் குழித்துறை நகராட்சி தலைவர் பொன். ஆசைதம்பி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.