நாகர்கோவிலில் பொது இடங்களில் குப்பை கொட்டிய 2 மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ.15,000 அபராதம்!

0
29
நாகர்கோவில் மாநகராட்சியில் பொது இடங்களில் குப்பை கொட்டிய இரண்டு மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ.15,000 அபராதம்
நாகர்கோவிலில் பொது இடங்களில் குப்பை கொட்டிய இரண்டு மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ.15,000 அபராதம் விதித்து மாநகராட்சி நடவடிக்கை.

நாகர்கோவில் மாநகராட்சியில் பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டிய இரண்டு மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ.15,000 அபராதம்… நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட தலைமை தபால் நிலையம் அருகே குப்பைகளைத் தரம் பிரித்து வழங்காமல், பொது இடங்களில் கொட்டி சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்திய இரண்டு மருத்துவ நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.15,000 அபராதம் விதிக்கப்பட்டது. நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் மரியாதைக்குரிய ஐஸ்வர்யா, IAS அவர்களின் உத்தரவின்பேரில், மாநகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா MBBS அவர்கள் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் 15,000 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்… மேலும் குப்பைகள் கொட்டப்பட்ட இடம் சுத்தம் செய்யப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது… குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களில் சேரும் குப்பைகளை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் தரம் பிரித்து வழங்காமல் பொது இடங்களில் சுகாதார சீர்கேடு விளைவிக்கும் வகையில் வீசி சென்றால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஆணையர் எச்சரித்துள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here