குமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று (ஜனவரி 10) நடைபெற்றது. முன்னதாக கோவில் பிரகாரம் முழுவதும் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து அதிகாலை 3.30 மணி முதல் கேரளா தமிழக பக்தர்கள் திரளாக கூவிய் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக ஆலயத்தின் மேற்கு வாசலில் துவங்கி திருவட்டார் அம்மாவன் சந்திப்பு, பேருந்து நிலையம் வரை சுமார் 1 கிலோமீட்டர் தூரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக அழகிய மண்டபம், மார்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. பக்தர்கள் வருகையை யொட்டி 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.