நித்திரவிளை அருகே கலிங்கராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் மைதீன் அடிமை (49). ஓட்டல் தொழிலாளி. இவரது மனைவி முனீறா (48). நேற்று இரவு சுமார் 10 மணியளவில் மைதீன் மனைவியிடம் குடிக்க பணம் கேட்டுள்ளார். அவர் பணம் கொடுக்க மறுத்துவிட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மைதீன் அடிமை மனைவியைப் படித்து தள்ளி உள்ளார். இதில் நிலை தடுமாறிய முனீறா பீரோவின் மீது விழுந்துள்ளார். இதில் தலை உடைந்து ரத்த ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த முனிறா குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக நித்திரவிளை போலீசில் முனிறா புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மைதீன் அடிமையை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.