குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் நேற்று நாகர்கோவில் நேசமணி நகர் போலீஸ் நிலையத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது போலீஸ் நிலையத்தில் அலுவலக ஆவணங்கள், போலீசாரின் வருகைப் பதிவேடு, குற்றவாளிகளின் எண்ணிக்கை தொடர்பான ஆவணங்கள், போலீஸ் வாகனங்கள், துப்பாக்கிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள போலீஸ் குடியிருப்புகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது குடியிருப்பு மற்றும் போலீஸ் நிலையத்தை தூய்மையாக வைத்திருக்கவும், புகார் அளிக்க வரும் மக்களிடம் கனிவுடன் நடந்துகொள்ளவும் போலீசாருக்கு அறிவுறுத்தினார்.
போலீஸ் குடியிருப்பில் ஆய்வு செய்தபோது, போலீசாரின் குழந்தைகளிடம் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் கலந்துரையாடினார். அப்போது அங்கு குழந்தைகள் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுத்திடவும், அங்கு விரைவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். ஆய்வின் போது நாகர்கோவில் உதவி போலீஸ் சூப்பிரண்டு லலித்குமார், இன்ஸ்பெக்டர் இசக்கிதுரை மற்றும் போலீசார் உடனிருந்தனர்.