மாநில அளவிலான ஜூனியர் மகளிர் கால்பந்து: திண்டுக்கல், ஈரோடு, சேலம், திருவாரூர் அணிகள் வெற்றி

0
77

தமிழ்​நாடு கால்​பந்து சங்​கத்​தின் முன்​னாள் செய​லா​ளர் டி.ஆர். கோவிந்​த​ராஜனின் நினை​வாக, தமிழ்​நாடு கால்​பந்து சங்​கம் சார்​பில் ஜூனியர் மகளிர் மாநில கால்​பந்து சாம்​பியன்​ஷிப் போட்டி திண்​டுக்​கலில் நேற்று தொடங்​கியது. இந்​தத் தொடரில் கலந்து கொண்​டுள்ள 19 அணி​கள் இரு பிரிவு​களாக பிரிக்​கப்​பட்​டிருந்​தன.

குரூப் ‘பி’ போட்​டிகள் திண்​டுக்​கலில் உள்ள எஸ்​டிஏடி மைதானத்​தில் நடை​பெற்​றது. இந்த போட்​டியை திண்​டுக்​கல் மாவட்ட கால்​பந்து சங்க தலை​வர் ஜி.சுந்​தர​ராஜன் தொடங்கி வைத்​தார். நிகழ்ச்​சி​யில் தமிழ்​நாடு கால்​பந்து சங்​கம் தலை​வர் சண்​முகம், திண்​டுக்​கல் மாவட்ட பயிற்சி கலெக்​டர் சி.​வினோ​தினி பார்த்​திபன், பார்​வதி குழு​மத்​தின் என்​.தர், திண்​டுக்​கல் மாவட்ட கால்​பந்து சங்​கத்​தின் துணைத் தலை​வர் ஆர்​.ரமேஷ் படேல், மாவட்ட விளை​யாட்டு அதி​காரி சிவா உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர்.

முதல் ஆட்​டத்​தில் திண்​டுக்​கல் 9-0 என்ற கோல் கணக்​கில் திருப்​பூர் அணியை தோற்​கடித்​தது. பிர​திக்சா 5, ஆனந்த் 2, நயனா, காவ்யா ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்​தனர். 2-வது ஆட்​டத்​தில் திரு​வள்​ளூர் அணி 5-0 என்ற கோல் கணக்​கில் தேனி அணியை வீழ்த்​தி​யது. கோபி​கா, சங்​கீதா ஆகியோர் தலா 2 கோல்​களும், கிறிஸ்டி ஒரு கோலும் அடித்​தனர். அடுத்த ஆட்​டத்​தில் திரு​வாரூர் அணி 24-0 என்ற கோல் கணக்​கில் திருச்சி அணியை தோற்​கடித்​தது.

குரூப் ‘ஏ’ போட்​டிகள் செயின்ட்​ஜோசப் பாலிடெக்​னிக் கல்​லூரி​யில் நடை​பெற்​றன. போட்​டிகளை கல்​லூரி முதல்​வர் ஜான் பீட்​டர் சூசை​ராஜ் முன்​னிலை​யில் கல்​லூரி தாளாளர் பீட்​டர்​ராஜ் தொடங்கி வைத்​தார்.

முதல் ஆட்​டத்​தில் நீல​கிரி அணி 6-0 என்ற கோல் கணக்​கில் ராம்​நாடு அணியை வீழ்த்​தி​யது. கனிஷ்மா 3, விகாஷினி 2, பூர்விகா ஒரு கோல் அடித்​தனர். 2-வது ஆட்​டத்​தில் ஈரோடு 15-0 என்ற கோல் கணக்​கில் சிவகங்கை அணியை தோற்​கடித்​தது. பிர​திஷா 4 கோல்​களும், சுபிக்சா 3 கோல்​களும் மோனி​கா, பிர​பா, அமிர்​தவர்​ஷினி ஆகியோர் தலா 2 கோல்​களும் ரிதுனி​தா, சுபத்ரா ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்​தனர். 3-வது ஆட்​டத்​தில் சேலம் 19-0 என்ற கோல் கணக்​கில் விருதுநகரை வென்​றது. சென்​னை அணி 4-0 என்​ற கணக்​கில்​ நீல​கிரியை தோற்​கடித்​தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here