நஜ்முல் ஹோசைன் ஷான்டோ சதம் விளாசல்: முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் 301 ரன்கள் குவிப்பு

0
16

பாகிஸ்தான் – வங்கதேசம் அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி மிர்​பூர் நகரில் நேற்று தொடங்​கியது. டாஸ் வென்ற பாகிஸ்​தான் அணி பீல்​டிங்கை தேர்வு செய்​தது. முதலில் பேட் செய்த வங்​கதேச அணிக்கு தொடக்​கம் அதிச்சியாக இருந்​தது. தொடக்க வீரர்​களான மஹ்​முதுல் ஹசன் ராய் 8 ரன்​களில் ஷாகின் ஷா அப்​ரிடி பந்​தில் ஆட்​ட​ம் இழந்​தார்.

மற்​றொரு தொடக்க வீர​ரான ஷத்​மான் இஸ்​லாம் 13 ரன்​களில் ஹசன் அலி பந்​தில் வெளி​யேறி​னார். 3-வது விக்​கெட்​டுக்கு மொமினுல் ஹக்​குடன் இணைந்த கேப்​டன் நஜ்​முல் ஹோசைன் ஷான்டோ பார்ட்​னர்​ஷிப்பை கட்​டமைத்து ஆட்​டத்தை முன்​னேடுத்​துச் சென்​றார். அபார​மாக விளை​யாடி சதம் அடித்த நஜ் முல் ஹோசைன் ஷான்டோ 130 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 12 பவுண்​டரி​களு​டன் 101 ரன்​கள் விளாசிய நிலை​யில் முகமது அப்பாஸ் பந்​தில் எல்​பிடபிள்யூ முறை​யில் ஆட்​ட​மிழந்​தார்.

3-வது விக்​கெட்​டுக்கு நஜ்​முல் ஹோசைன் ஷான்​டோ, மொமினுல் ஹக் ஜோடி 170 ரன்​கள் சேர்த்​தது. நிதான​மாக விளை​யாடிய மொமினுல் ஹக் 200 பந்​துகளில், 10 பவுண்​டரி​களு​டன் 91 ரன்​கள் எடுத்த நிலை​யில் நோமன் அலி பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். இதையடுத்து களமிறங்​கிய முஸ்​பிகுர் ரகிம், லிட்​டன் தாஸ் ஜோடி தடுப்​பாட்​டத்​தில் கவனம் செலுத்​தி​யது.

முதல்​நாள் ஆட்​டத்​தின் முடி​வில் வங்​கதேச அணி 85 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 301 ரன்​கள் எடுத்​தது. முஸ்​பிகுர் ரகிம் 104 பந்​துகளில், 6 பவுண்​டரி​களு​டன் 48 ரன்​களும், லிட்​டன் தாஸ் 35 பந்துகளில், 8 ரன்​களும் சேர்த்து களத்​தில் இருந்​தனர். இன்று 2-வது நாள்​ ஆட்​டம்​ நடை​பெறுகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here