மகளிர் டிவிஷன் கால்பந்து போட்டிகள் 11-ம் தேதி தொடக்கம்

0
17

சென்னை மாவட்ட கால்பந்து சங்​கம் சார்​பில் மகளிருக்​கான ‘ஏ’, ‘பி’ ‘சி’ டிவிஷன் லீக் போட்​டிகள் நடை​பெற உள்ளன. இதில் ‘ஏ’ டிவிஷன் போட்​டிகள் வரும் 11-ம் தேதி முதல் 23 ம் தேதி வரை சென்னை வியாசர்​பாடி ஜீவா ரயில் நிலை​யம் அருகில் உள்ள கன்​னி​காபுரம் விளை​யாட்டு மைதானத்​தில் நடைபெறுகிறது.

இதில் எஸ்​டிஏடி, தமிழக காவல்​துறை அணி, லைப் ஸ்போர்ட்ஸ் அகாட​மி, எம்​ஓபி வைஷ்ணவா கல்​லூரி, சமா​தானம் கால்​பந்து கிளப், எஃப்சி டர்ன் புரோ, ராணி மேரி கல்​லூரி, ஃபுட்​பால் + ஆகிய 8 அணி​கள் கலந்து கொள்​கின்​றன. ‘பி’ டிவிஷன் போட்​டிகள் வரும் 12-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை அதே மைதானத்​தில் நடை​பெறுகின்​றன. இதில் புழல் எஃப்​சி, சுரேஷ் மெமோரியல் எஃப்​சி, பியூயல் ஸ்போர்ட்​ஸ், டெலண்ட் எஃப்​சி, ரைட் டிராக், பெகாசஸ் ஆகிய அணி​கள் பங்​கேற்கின்​றன.

‘சி’ டிவிஷன் போட்​டிகள் வரும் 12-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை பேசின் பிரிட்​ஜில் உள்ள டான் போஸ்கோ இளைஞர் மையத்​தில் நடை​பெறுகிறது. இதில் கருணால​யா, ஆக்​ஸிலிம், நெக்​ஸ்ட் ஜெனரேஷன், எஸ்​பிஓஏ ஜூனியர் கல்​லூரி, ஆல்​பா, குளோபர் ஸ்போர்ட்​ஸ், டே ஸ்டார்​ எஃப்​சி ஆகிய அணி​கள்​ பங்​கேற்​கின்​றன.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here