சென்னை மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில் மகளிருக்கான ‘ஏ’, ‘பி’ ‘சி’ டிவிஷன் லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் ‘ஏ’ டிவிஷன் போட்டிகள் வரும் 11-ம் தேதி முதல் 23 ம் தேதி வரை சென்னை வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகில் உள்ள கன்னிகாபுரம் விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் எஸ்டிஏடி, தமிழக காவல்துறை அணி, லைப் ஸ்போர்ட்ஸ் அகாடமி, எம்ஓபி வைஷ்ணவா கல்லூரி, சமாதானம் கால்பந்து கிளப், எஃப்சி டர்ன் புரோ, ராணி மேரி கல்லூரி, ஃபுட்பால் + ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன. ‘பி’ டிவிஷன் போட்டிகள் வரும் 12-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை அதே மைதானத்தில் நடைபெறுகின்றன. இதில் புழல் எஃப்சி, சுரேஷ் மெமோரியல் எஃப்சி, பியூயல் ஸ்போர்ட்ஸ், டெலண்ட் எஃப்சி, ரைட் டிராக், பெகாசஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.
‘சி’ டிவிஷன் போட்டிகள் வரும் 12-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை பேசின் பிரிட்ஜில் உள்ள டான் போஸ்கோ இளைஞர் மையத்தில் நடைபெறுகிறது. இதில் கருணாலயா, ஆக்ஸிலிம், நெக்ஸ்ட் ஜெனரேஷன், எஸ்பிஓஏ ஜூனியர் கல்லூரி, ஆல்பா, குளோபர் ஸ்போர்ட்ஸ், டே ஸ்டார் எஃப்சி ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.
