Home விளையாட்டு செய்திகள் விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜுனா விருது: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்

விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜுனா விருது: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்

0

 விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கியதற்காக வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று வழங்கி சிறப்பித்தார்.

ஆண்டுதோறும் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய இளைஞர் நல மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் அர்ஜுனா விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ரூ.15 லட்சம் ரொக்கம்

வெண்கலத்தால் ஆன அர்ஜுனா சிலை, விழாவுக்கான பிரத்யேக ஆடை, ரூ.15 லட்சம் ரொக்கம் ஆகியவை அடங்கியது இந்த விருது. 2025-ம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இதற்கான விழா டெல்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கி சிறப்பித்தார்.

குழு புகைப்படம்

விழாவில் தேஜஸ்வின் சங்கர் (தடகளம்), முகமது அஜ்மல் வரியதோடி (தடகளம்), பிரியங்கா கோஸ்வாமி (தடகளம்), ட்ரீசா ஜாலி (பாட்மிண்டன்), காயத்ரி கோபிசந்த் (பாட்மிண்டன்), நரேந்தர் (குத்துச்சண்டை), திவ்யா ஜிதேந்திரா தேஷ்முக் (செஸ்), லால்ரெம்சியாமி (ஹாக்கி), ராஜ்குமார் பால் (ஹாக்கி), சுர்ஜீத் (கபடி), பூஜா (கபடி), அர்விந்த் சிங் (படகோட்டுதல்), அகில் ஷியோரன் (துப்பாக்கிச் சுடுதல்), மாற்றுத் திறனாளிகள் ஏக்தா பியான், தனுஷ் ஸ்ரீகாந்த், ருத்ரான்க் ஷ் கந்தேல்வால் ஆகியோருக்கு விருதுகளை குடியரசுத் தலைவர் முர்மு வழங்கினார். பின்னர் விருது பெற்றவர்கள் அனைவரும் குடியரசுத் தலைவருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version