இயக்குநர் சுதா கொங்கரா சூர்யா நடிப்பில் ‘புறநானூறு’ என்ற படத்தை இயக்க இருந்தார். இதில் விஜய் வர்மா, நஸ்ரியா, துல்கர் சல்மான் உட்பட பலர் நடிப்பதாக இருந்தது. அந்தப் படம் டிராப் ஆனதை அடுத்து அதே கதையை சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்குகிறார்.
இதில் சிவகார்த்திகேயனுக்குத் தம்பியாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் அவர் விலகிவிட்டார். அந்த கேரக்டரில் அதர்வா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில், நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். மலையாள நடிகர் ரோஷன் மேத்யூ வில்லனாக நடிப்பதாகவும் படப் பிடிப்பு ஜனவரியில் தொடங்கும் என்றும் தெரிகிறது.