நடிகர்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் நடிகைகளுக்கு கிடைப்பதில்லை என்று மாளவிகா மோகனன் கூறினார். அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: பாலிவுட்டுக்கும் தென்னிந்திய சினிமாவுக்கும் கலாச்சார ரீதியான வேறுபாடு இருப்பதைக் காண்கிறேன். எந்த மொழியாக இருந்தாலும், திரைக் கலைஞராக அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
வெவ்வேறு மொழி, உணவு, போக் கூடிய அல்லது பேசக்கூடாத விதிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் நடிகர்கள், நவீன நாடோடிகளைப் போன்றவர்கள். ஒரு நாள் ஹைதராபாத் என்றால் அடுத்த நாள் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு குக்கிராமம் என பயணிக்க வேண்டியிருக்கும். அதனால் இருக்கும் இடத்துக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும், தமிழ், தெலுங்கில் 8-9 மணி நேரம்தான் படப்பிடிப்பு நடக்கும். இந்தியில் 12-13 மணி நேரம் எடுத்துக்கொள்கிறார்கள்.
சில நேரம் 14 மணி நேரம் வரை செல்கிறது. நடிகர்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் நடிகைகளுக்கு கிடைப் பதில்லை. ஒரு படம் ஹிட்டானால், நடிகர்கள்தான் அதற்குக் காரணம் என்பார்கள். ஓடவில்லை என்றால் நாயகியை குறை சொல்வார்கள். தென்னிந்திய சினிமாவில் இது சாதாரணமானது இவ்வாறு மாளவிகா மோகனன் கூறியுள்ளார்.