வெள்ளிச்சந்தை: சிறுமியிடம் அத்துமீறியவர் போக்சோவில் கைது

0
57

வெள்ளிச்சந்தை அருகே பிள்ளைதோப்பு பகுதி சேர்ந்தவர் ஆரோக்கிய ஜோஸ் (43). மீன்பிடித் தொழிலாளி. இவருக்கு திருச்சியைச் சேர்ந்த 34 வயது பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. 

அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்தப் பெண் ஆரோக்கிய ஜோசை காதலித்து கடந்த 2018-ல் 2-ம் திருமணம் செய்தார். பின்னர் தனது மகளுடன் குமரி மாவட்டம் பிள்ளைதோப்பில் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் அந்தப் பெண் குழந்தை கடந்த 2022-ல் வயதுக்கு வந்தது. அதன் பின் சிறுமியிடம் ஆரோக்கிய ஜோஸ் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த ஆரோக்கிய ஜோஸ் மனைவி மற்றும் சிறுமியை மது அருந்த வற்புறுத்தியுள்ளார். அதற்கு உடன்படாத இருவரும் வீட்டைவிட்டு வெளியே தப்பி வந்துள்ளனர். 

இதுகுறித்து சிறுமியின் தாய் வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு செய்து ஆரோக்கிய ஜோசை கைது செய்தனர். பின்னர் நாகர்கோவில் போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here