கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் மதுவிலக்கு பிரிவு போலீசார் ரோந்து சுற்றி வந்த போது, ஜூனைத் என்பவர் கஞ்சா வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அவரிடம் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அவரிடம் 55 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவர் மீது நேற்று வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.