
நாகா்கோவில் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
நாகா்கோவிலை அடுத்த இறச்சகுளம் பகுதியைச் சோ்ந்த பொன்னையன் மகன் ஜோசப் (61), இவா், கடந்த 2019 ஆம் ஆண்டு 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.
இது தொடா்பாக நாகா்கோவில் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் போக்ஸோ சட்டத்தின் கீழ் அவா் மீது வழக்குப் பதிந்து. கைது செய்தனா்.
இது தொடா்பான வழக்கு நாகா்கோவில் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, சுந்தரையா, குற்றம்சாட்டப்பட்ட ஜோசப்புக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.











