
திருவிதாங்கோடு முதல்நிலை பேரூராட்சியில் மழைநீா் சேமிப்பு குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்கத்துக்கு பேரூராட்சித் தலைவா் நசீா் தலைமை வகித்தாா். மழைநீா் சேகரிப்பு கட்டமைப்பு அமைத்தல் மற்றும் புனரமைப்பு செய்வதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், பேரூராட்சி செயல் அலுவலா், துணைத் தலைவா், பேரூராட்சி உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.











