மருதூர்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் செல்லம்மாள் (80) இவர் நேற்று தக்கலை அரசு மருத்துவமனையில் மருந்து வாங்கி விட்டு வீட்டிற்கு பஸ்ஸில் சென்றுள்ளார். சாமியார்மடம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி விட்டு பின்னர் சாலையை கடக்க முயற்சி செய்தார். அப்போது வேகமாக அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத பைக் ஒன்று செல்லம்மாள் மீது மோதி, அவரை தள்ளிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்டவர் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அவரது மகன் வின்சென்ட் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மூதாட்டி மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற பைக் குறித்து விசாரித்து வருகின்றனர்.