புதுக்கடை அருகே பூட்டேற்றி பகுதியில் கண்ணத்தான் குழி பத்ரேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காலை மாலை நேரங்களில் பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் சம்பவ தினம் நள்ளிரவு சுமார் 1 மணியளவில் கோவிலில் புகுந்த மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ 300 – ஐ திருடியுள்ளனர். இது தொடர்பாக கோவில் தலைவர் ஜஸ்டின் குமார் என்பவர் புதுக்கடை போலீசில் நேற்று (ஜன.17) புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.