தேங்காபட்டணம் பகுதி தோப்பு என்ற இடத்தைச் சேர்ந்தவர் செய்யது அலி ஷாஜகான் (53). இவர் விவசாயி. இவர் சம்பவ தினம் தேங்காபட்டணம் சந்திப்பு பகுதியில் நிற்கும்போது அங்கு வந்த தேங்காபட்டணம் ஆஸ்பத்திரி சந்திப்பு பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் (43) என்பவர் கெட்ட வார்த்தைகள் பேசியுள்ளார்.
இதைச் செய்யது அலி ஷாஜகான் தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த இஸ்மாயில் மதுபான பாட்டிலால் ஷாஜகானை தாக்கியுள்ளார். இதில் நெற்றியில் ரத்தக் காயம் ஏற்பட்டது. காயமடைந்த செய்யது அலி ஷாஜகான் தேங்காபட்டணத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். புதுக்கடை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.