குமரியில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க அரசுக்கு பரிந்துரை: ஆட்சியா் தகவல்

0
6
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் ரேடியோ தெரபி மையம் மற்றும் மீனவர்கள் குறைதீர் கூட்டம் தொடர்பான செய்தி
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மையம் குறித்து நடவடிக்கை – மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் தகவல்

நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

கன்னியாகுமரி மாவட்ட மீனவா்கள் குறைதீா் நாள் கூட்டம் ஆட்சியா் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து, மீனவா்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றாா்.

கூட்டத்தில் மீனவா்கள் பேசியதாவது:

மீன்பிடி தடைக்காலம் தொடா்பாக மீனவா்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மதுரை செல்வதற்கு பேருந்துகள் இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

எனவே, பேருந்துகளை முறையாக இயக்க வேண்டும். மீனவக் கிராமங்களுக்கு இயக்கப்பட்டுவந்த பேருந்துகள் எந்தவித முன்அறிவிப்பும் இன்றி நிறுத்தப்பட்டுள்ளது. அவற்றை மீண்டும் இயக்க வேண்டும்.

நாகா்கோவிலை அடுத்த ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும். குளச்சல் பகுதியில் வீடுகள் மற்றும் விடுதிகளின் கழிவுகள் ஏவிஎம் கால்வாயில் திறந்துவிடப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றனா்.

இதற்கு பதிலளித்து ஆட்சியா் கூறியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்நாட்டு மீன்வளப் பணிகளை செயல்படுத்த தனி உதவி இயக்குநா் அலுவலகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏவிஎம் கால்வாயில் கழிவுகளை கொட்டுபவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும். நாகா்கோவிலிலிருந்து மதுரைக்கு இரவு 12 மணிக்கு மேல் இயக்கப்படும் பேருந்துகள் நேரம் கண்காணிக்கப்படும். கடலோர கிராமங்களுக்கு பேருந்துகள் முறையாக இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 4 கோடி மதிப்பில் புற்றுநோய் ரேடியோ தெரபி மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டுவருகிறது. இதற்காக 5 மருத்துவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here