
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர் தீபன்ராஜ் (36). போலீஸ் பாதுகாப்பில் இருந்து தப்பித்து ஓட்டம் பிடித்தார்.
இந்த நிலையில் தனிப்படை போலீசார் பல்வேறு சிசிடிவிகளை ஆய்வு செய்து தக்கலை பகுதியில் தீபன்ராஜை மடக்கி பிடித்தனர். இதனிடையே கைதியை தப்பவிட்ட 3 போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.













