அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரில் செயின்ட் லூயிஸ் ரேபிடு மற்றும் பிளிட்ஸ் செஸ்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா, பிரான்ஸின் மாக்சிம் வாச்சியர்-லாக்ரேவ், அலிரேசா ஃபிரோஸ்ஜா, அமெரிக்காவின் லெவோன் அரோனியன், லெய்னியர் டொமிங்குவேஸ் பெரெஸ், ஹிகாரு நகமுரா, சோ வெஸ்லி, பேபியானோகருனா, ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சி, உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசட்டோரோவ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதன் முதல் சுற்றில் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் லெவோன் அரோனியனுக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்தார். தொடர்ந்து 2-வது சுற்றில் பிரான்ஸின் மாக்சிம் வாச்சியர்-லாக்ரேவுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தார். 3-வது சுற்றில் ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சியை எதிர்கொண்டார் பிரக்ஞானந்தா. இதிலும் அவர், தோல்வியை எதிர்கொண்டார். இன்னும் 6 சுற்றுகள் உள்ள நிலையில் பிரக்ஞானந்தா 0.5 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளார். மாக்சிம் வாச்சியர்-லாக்ரேவ் 2.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.