வேர்கிளம்பி பகுதியை சார்ந்தவர் ராஜன். இவர் நேற்று தனது காரில் களியக்காவிளையில் தனது உறவினர் வீட்டிற்கு செல்ல புறப்பட்டார். கார் குழித்துறை பாலத்தில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் தாறுமாறாக ஓடி பாலத்தின் சுவரில் மோதி நின்றது. இந்த விபத்தில் காரின் முன் பக்கம் அப்பளம் போல் நொறுங்கிறது. பலத்த காயம் அடைந்த ராஜனை அப்பகுதியினர் மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிட்சைக்காக சேர்த்தனர். இதனால் ரோட்டில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.