நித்திரவிளை: பேத்தியிடம் சில்மிஷம்; தாத்தாவுக்கு போக்சோ

0
620

நித்திரவிளை அருகே காஞ்ஞாபுரம் பகுதியில் ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி பிள்ளைகளுடன் தன் வயதான தந்தையுடன் காஞ்ஞாம்புரத்தில் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள். இவர்கள் ஐந்து வயது சிறுமி அந்த பகுதியில் ஒரு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். மருமகள் வீட்டில் இல்லாத நேரத்தில் பேத்தியான சிறுமியுடன் தாத்தா கடந்த டிசம்பர் 23ஆம் தேதி சில்மிஷத்தில் ஈடுபட்டாராம். 

தொடர்ந்து தாத்தா சிறுமியிடம் பலமுறை சில்மிஷம் செய்ததுடன், இதை அம்மாவிடம் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதை தாங்கிக் கொள்ள முடியாத சிறுமி கடந்த இரு தினங்களுக்கு முன்பு தாயாரிடம் சம்பவத்தை கூறியுள்ளார். இதையடுத்து தாய் குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். மகளிர் போலீசார் சிறுமியின் தாத்தா மீது போக்சோ உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் இன்று 9-ம் தேதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here