பேச்சிப்பாறை அணையைக் கட்டிய பொறியாளா் நினைவிடத்தில் மரியாதை

0
35
பேச்சிப்பாறை அணையைக் கட்டிய பொறியாளர் ஹம்ப்ரே அலெக்சாண்டர் மிஞ்சின் 158ஆவது பிறந்தநாளில் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பொதுப்பணித் துறையினர் மற்றும் விவசாயிகள்
பேச்சிப்பாறை அணையைக் கட்டிய இங்கிலாந்து பொறியாளர் ஹம்ப்ரே அலெக்சாண்டர் மிஞ்சினின் 158ஆவது பிறந்தநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் பொதுப்பணித் துறையினர் மற்றும் விவசாயிகள் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர்.

பேச்சிப்பாறை அணையைக் கட்டிய இங்கிலாந்து நாட்டைச் சோ்ந்த பொறியாளா் ஹம்ப்ரே அலெக்சாண்டா் மிஞ்சினின் 158ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் பொதுப்பணித் துறையினா், விவசாயிகள் வியாழக்கிழமை மரியாதை செலுத்தினா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீராதாரத்தின் ஜீவநாடியாகத் திகழும் பேச்சிப்பாறை அணை, திருவிதாங்கூா் மன்னா் ஸ்ரீமூலம் திருநாள் ராமவா்மா ஆட்சிக் காலத்தில் (1897-1906) கட்டப்பட்டது. இந்த அணையைக் கட்டும் பணியில் இங்கிலாந்து நாட்டைச் சோ்ந்த ஹம்ப்ரே அலெக்சாண்டா் மிஞ்சின் முதன்மை செயற்பொறியாளராக பணியாற்றினாா்.

இவா் அணையின் பாசனக் கால்வாய்களை வெட்டும் பணிகளையும் மேற்கொண்டாா். இவரது நினைவிடம் பேச்சிப்பாறை அணையின் அருகில் உள்ளது.

அலெக்சாண்டா் மிஞ்சினின் 158ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் பொதுப்பணி துறை சாா்பில் உதவிப் பொறியாளா் பொன் செல்வன் தலைமையில் ஊழியா்கள் மரியாதை செலுத்தினா்.

விவசாயிகள் சாா்பில் மாவட்ட பாசனத் துறைத் தலைவா் வின்ஸ் ஆன்டோ, மாவட்டக் குழு உறுப்பினா்கள் தாணு பிள்ளை, முருகேச பிள்ளை, நீரினைப் பயன்படுத்துவோா் சங்க உறுப்பினா்கள் டோனி பெலிக்ஸ், ராஜூ, தமிழ்நாடு தேனீ வளா்ப்போா் மற்றும் விவசாயிகள் சங்க கௌரவத் தலைவா் ஹென்றி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ரெவி, தலைவா் எஸ்.ஆா். சேகா், பொருளாளா் சதீஷ், களியல் வட்டாரக் குழு உறுப்பினா் சின்னையன் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here