குமரியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு இடங்களில் வேரோடு மரம் சாய்ந்து வீடுகள், மின் கம்பங்கள் சேதமாகி வருகிறது. இதுவரையிலும் குமரியில் 470-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன.
இந்த நிலையில் பத்மநாபபுரம் கிழக்கு தெருவில் உள்ள காட்டுமரம் ஒன்று வேரோடு சாய்ந்து எதிர்ப்புறம் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி கட்டடத்தின் மீது நேற்று மாலை விழுந்தது. இது குறித்த தகவல் அறிந்ததும் நகராட்சி ஊழியர்கள் மற்றும் தக்கலை தீயணைப்பு நிலை வீரர்கள் அங்கு சென்று ராட்சத இயந்திரத்தின் உதவியுடன் பள்ளி மீது சாய்ந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.