நித்திரவிளை அருகே சரல்முக்கு பகுதியை சேர்ந்தவர் நெல்சன் (48). கொத்தனார். நேற்று இரவு நெல்சன் பைக்கில் சின்னத்துறை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த அபினேஷ் (29) என்ற வாலிபர் போதையில் பைக் ஓட்டி வந்து நெல்சன் மீது மோதியுள்ளார்.
இதில் உடலில் பல்வேறு இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்ட நெல்சன் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது சம்பந்தமாக நெல்சன் மனைவி வசந்தா (48) என்பவர் நித்திரவிளை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அபினேஷ் மீது நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.