கிள்ளியூர் தொகுதி மெதுகும்மல் கோவில் மண்டல சமய வகுப்பு ஆண்டு விழா இன்று 29ம் தேதி நடைபெற்றது.
நிகழ்ச்சி துவக்கமாக அதங்கோடு மாயா கிருஷ்ணசுவாமி கோயிலில் இருந்து ஊர்வலம் துவங்கியது. மெதுகும்மல் ஊராட்சித் தலைவர் சசிகுமார் தலைமை வகித்தார். அதங்கோடு கோயில் பொருளாளர் ராஜூ கொடியை அசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து நடந்த ஆண்டு விழா துவக்க நிகழ்ச்சியில் பங்கலாட்சி செல்லசுவாமி திருவிளக்கேற்றி வைத்தார்.
அதன்பின்னர் மண்டல அளவிலான சமய வகுப்பு மாணவர்களுக்கான பண்பாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கறச்சிவிளை கோயில் தலைவர் அனீஷ் பரிசுகள் வழங்கினார்.