இந்திய ஆயுள் காப்பீடு முகவர் மத்திய, மண்டல கோட்ட சங்கத்தின் அறிவுறுத்தலின்படி பாலிசிதாரர்களின் போனசை உயர்த்தவும், பாலிசிக்கான ஜிஎஸ்டி நீக்கிடவும், பாலிசி கடனுக்கான வட்டியை குறைத்து விடவும், ஏஜென்ட்களின் கமிஷனை குறைத்ததை கண்டித்தும், க்ளாவே கமிஷன் சரத்தை நீக்கிடவும், முகவர்களின் குழு காப்பீடு வயதை உயர்த்திடவும், அனைத்து முகவர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கிடவும் மேலும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி குழித்துறை கிளை சார்பில் மார்த்தாண்டம் எல்ஐசி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிளைச் செயலாளர் பீட்டர் தலைமை வகித்தார். தலைவர் ஐயப்பன் பிள்ளை முன்னிலை வி சித்தார். துணைத் தலைவர் ஸ்டீபன், பொருளாளர் ராஜாமணி உட்பட பல கலந்து கொண்டனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை பலகட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.