கருங்கல் அருகே திக்கணங்கோடு பகுதியை சேர்ந்தவர் மரிய அருள் தாஸ் (55). கொத்தனார். இவரது மனைவி ஐடா பிளாரன்ஸ் (51). இன்று (28-ம் தேதி) அதிகாலை ஐடா பிளாரன்ஸ் வீட்டின் பின்வாசல் வழியே வெளியே சென்றார். அப்போது அந்த பகுதியில் நின்ற மர்ம நபர் ஐடா கழுத்தில் அணிந்திருந்த எட்டு பவுன் செயினை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இரு சூழ்ந்து இருந்ததால் மர்ம நபரை உடனடியாக அடையாளம் காண முடியவில்லை. ஐடா சத்தம் போட்ட உடன் கணவர் மற்றும் பிள்ளைகள் வந்து பார்த்துள்ளனர். இது குறித்து மரிய அருள்தாஸ் கருங்கல் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.