கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று (செப்.,27) போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் போக்குவரத்து விதிமுறைகளுக்கு மீறி வாகன ஓட்டிய இளைஞர்களுக்கு அபராதம் விதித்து, அவர்களது பெற்றோரை வரவழைத்து அறிவுரை வழங்கி இருசக்கர வாகனத்தை கொடுத்து அனுப்பிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.