குமரி மாவட்டத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி வீட்டின் அருகே உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலையில் அவரை திடீரென காணவில்லை.
இதனால் பயந்து போன பெற்றோர் மகளை காணவில்லை என போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் மாணவியை இரவு முழுவதும் பல இடங்களில் தேடினர். இந்த நிலையில் நேற்று 27ஆம் தேதி அதிகாலையில் மாணவி வீட்டுக்கு வந்துள்ளார். பெற்றோர் கேட்டபோது, வீட்டின் அருகே உள்ள சாலையில் சென்றபோது தன்னை காதலன் ஏமாற்றி அழைத்து சென்று மேலும் 2 பேருடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்ததாகவும், பிறகு காதலனே வீட்டின் அருகே கொண்டு வந்து விட்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளார். உடனே பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் மாணவியுடன் தீவிரமாக விசாரணை நடத்தினர். இது தொடர்பாக 2 பேரை பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீசார் ஒரு அதிகாரி கூறுகையில்: மாணவி பலாத்காரம் குறித்து விசாரித்து வருவதாகவும், இந்த புகாரில் உண்மை தன்மை இருக்கிறதா என தீவிர விசாரணை நடந்து வருவதாகவும், உண்மை தன்மையை பொறுத்து வழக்கு பதிவு செய்யப்படும் என்று கூறினார்.