குழித்துறை அருகே திருத்துவபுரம் பகுதியை சார்ந்தவர் சிவகுமார். இவர் படந்தாலுமூடு பகுதியில் டயர் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சார்ந்த கவின் என்பவருக்கும் நிலத்தகராறில் முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று கவின் மது அருந்திவிட்டு வெட்டுக்கத்தியுடன் சிவகுமார் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றியவே மறைத்து வைத்திருந்த வெட்டுக்கத்தியை எடுத்து சிவகுமாரை வெட்டியுள்ளார். பலத்த காயம் அடைந்த சிவகுமார் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியினர் வந்தனர். இந்த சமயத்தில் கவின் தப்பி ஓடியுள்ளார்.
அப்பகுதியினர் சிவகுமாரை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.