கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் கருங்கல் ராஜீவ் காந்தி சந்திப்பில் வைத்து மறைந்த முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று (டிச.27) நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் தலைமையில் அவரது உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட, வட்டார, மாநில நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.