குலசேகரம்: பெயிண்டர் தூக்கு போட்டு தற்கொலை

0
50

குலசேகரம் அருகே செருப்பாலூர் பகுதியைச் சேர்ந்தவர் அமல்ராஜ் என்பவர் மூத்த மகன் ஆஸ்பின் (31). பெயிண்டிங் வேலை செய்து வந்தார். திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் ஆஸ்பின் கட்டிடம் ஒன்றில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தபோது கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அன்று முதல் அவர் வேலைக்குச் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி இருந்துள்ளார். 

மேலும் அவர் மது பழக்கத்திற்கு அடிமையானார். இதற்கிடையே நேற்று ஆஸ்பின் மது குடித்துவிட்டு வீட்டுக்குச் சென்று அறையில் உறங்கச் சென்றார். இன்று அறைக்குச் சென்று பார்த்தபோது, ஆஸ்பின் விட்டத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதைக் கண்டனர். இது ஒரு தகவல் அறிந்த குலசேகரம் போலீசார் ஆஸ்பினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here