வெள்ளிமலை இந்து தர்ம வித்தியா பீடம் சார்பில் ஒவ்வொரு இந்து கோயில்களிலும் வைத்து இந்து சமய வேதங்கள், புராணங்கள், இராமாயணம், மஹாபாரதம் உள்ளிட்ட சமய கருத்துக்கள் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. இதில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பாட்டு, பேச்சு, நடனம், குழுப்பாடல், நாடகம் உள்ளிட்ட போட்டிகள் மண்டல், ஒன்றியம், மாவட்ட அளவில் நடத்தப்படும். இதில் வெற்றி பெறும் சமய வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.
இன்று களியக்காவிளை மண்டல அளவிலான 19 சமய வகுப்பு மாணவர்களுக்கு பண்பாட்டுப் போட்டிகள் பனச்சகுழி பத்திரகாளி அம்மன் கோயில் வளாகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய அமைப்பாளர் ரமேஷ்குமார் (பொறுப்பு) தலைமை வகித்தார். களியக்காவிளை மண்டல அமைப்பாளர் சுரேஷ்குமார், துணை அமைப்பாளர் ஷைஜு உள்ளிட்டோர் பங்கேற்றனர். மண்டல அளவில் போட்டிகள் நடந்தது. இதில் சாஸ்தாங்குளம் சமய வகுப்பு மாணவர்களுக்கு குழுப்பாடலில் இரண்டாம் பரிசும், நாடகப்போட்டியில் முதல் பரிசும் கிடைத்தது. வெற்றி பெற்ற சமய வகுப்பு மாணவ மாணவிகள் அருமனை மாத்தூர் கோணம் பத்திரகாளி அம்மன் கோயில் வளாகத்தில் நடைபெறும் ஒன்றிய போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். நாடகப்போட்டியில் முதல் பரிசும், குழுப்பாடலில் இரண்டாம் பரிசும் பெற்று சாதனை படைத்த மாணவர்களை சமய வகுப்பு நிர்வாகிகள் பாராட்டினர்.