மார்த்தாண்டம்: தேசிய நெடுஞ்சாலை வடிகால் சீரமைப்பு

0
45

மார்த்தாண்டம் பகுதியில் கனமழை பெய்யும் போது தண்ணீர் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ரோடு வழியாக ஆறாக பாய்ந்து பழைய தியேட்டர் ஜங்ஷன் வந்து தேங்கிய பிறகு வடிகால் வழியாக பாய்கிறது.

மார்த்தாண்டம் பழைய தியேட்டர் ஜங்ஷனுக்கும் காந்தி மைதானத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை குறுக்கே ஆள் உயரத்தில் வடிகால் ஓடை செல்கிறது. இந்த வடிகால் பிளாஸ்டிக் கவர், பிளாஸ்டிக் குப்பை மற்றும் கழிவு பொருட்களால் அடைந்து கழிவுநீர் சரியாக வடியாமல் காணப்பட்டது. இதை சீரமைக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று (மார்ச் 23) நகராட்சி சார்பில் தேசிய நெடுஞ்சாலை குறுக்கே உள்ள வடிகாலை சீரமைக்க முடிவு செய்து கிட்டாச்சி, நாகர்கோவில் நகராட்சியில் இருந்து ஜெட் ட்ராக் வாகனம் வரவழைக்கப்பட்டது பின் இந்த வடிகால் முழுமையாக சீரமைக்கப்பட்டது அனைத்து கழிவுகளும் அகற்றப்பட்டது. நேற்று (மார்ச் 23) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் மேம்பாலத்தின் கீழ் பகுதி வழியாக குறைவான வாகனங்கள் சென்றது. இதனால் சீரமைப்பு பணி துரிதவேகத்தில் நடந்தது.

இந்த வடிகால் ஆக்கிரமிப்பு முழுவதும் அகற்றப்பட்டு சீரமைப்பு பணி தொடர்ந்து நடைபெறும் என நகராட்சி சேர்மன் பொன். ஆசைத்தம்பி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here