
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே, நோய்வாய்ப்பட்டு இறந்த தாயின் உடல் மீது விழுந்து கதறி அழுத மகனும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரிமாவட்டம் அருமனை அருகேயுள்ள வலியவிளை பகுதியைச் சேர்ந்தவர் இவர் கடந்த சில நாட்களாக கடுமையான நோய் பாதிப்பு காரணமாக படுக்கையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆயிரமாய் வளர்த்த தாயின் மரணச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது மகன் , தாயின் உடலைப் பார்த்து கதறி அழுதுள்ளார். தாயின் உடல் மீது விழுந்து அழுதுகொண்டிருந்த போதே, திடீரென அவருக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், அதற்குள்ளாகவே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தாய் இறந்த சில நிமிடங்களிலேயே மகனும் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த கிராமத்தையும் கண்ணீரில் மூழ்கடித்துள்ளது.
இறந்த தாயின் உடலுக்கு அருகிலேயே மகனின் உடலும் வைக்கப்பட்டிருந்த காட்சி, அங்கிருந்தோரை உருக வைத்தது. இச்சம்பவம் குறித்து உள்ளூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாசத்திற்கு இலக்கணமாகத் திகழ்ந்த தாயும், மகனும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் வலியவிளை பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.













