புதுடெல்லி: இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனையான தீபா கர்மகார் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 31 வயதான தீபா கர்மகார் கடந்த 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் வால்ட் பிரிவில் 4வது இடம் பிடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். 0.15 புள்ளிகள் வித்தியாசத்தில் அவர், பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்திருந்தார்.
இந்தியாவில் இருந்து ஒலிம் பிக்கில் ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் பங்கேற்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றிருந்த அவர். விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீண்ட ஆலோசனைக்குப் பிறகு ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். இது எளிதான முடிவு இல்லை. ஆனால் இந்த முடிவை மேற்கொள்ள இது தான் சரியான தருணம் என உணர்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.