பழங்கால நாணயங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் என்று கூறியதை நம்பி சைபர் மோசடியில் சிக்கிய முதியவர் தற்கொலை

0
37

பழங்​கால நாண​யங்​களுக்கு ரூ. 2 கோடி வரை தரு​வ​தாக கூறி சைபர் மோசடி​யில் சிக்கி ஏமாந்த 65 வயது முதி​ய​வர் துப்​பாக்​கி​யால் சுட்டு தற்​கொலை செய்து கொண்ட சம்​பவம் மத்​திய பிரதேச மாநிலத்​தில் சோகத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

மத்​திய பிரதேசம் ரேவா நகரைச் சேர்ந்​தவர் சரோஜ் துபே (65). இவர் பள்ளி ஒன்​றில் காவலா​ளி​யாக வேலை​பார்த்து ஓய்வு பெற்​றவர். இவருக்கு ஜூலை 1-ம் தேதி அடை​யாளம் தெரி​யாத எண்​ணிலிருந்து அழைப்பு வந்​தது. பழங்​கால நாணய நிறு​வனத்​தின் பிர​தி​நிதி என்று கூறிக்​கொண்டு அலங்​கார மற்​றும் பாரம்​பரிய நோக்​கங்​களுக்​காக அரசு பழங்​கால நாண​யங்​களை வாங்​கு​வ​தாக​வும் அதற்கு லட்​சக்​கணக்​கில் பணம் கொடுப்​ப​தாக​வும் ஆசை காட்​டி​யுள்​ளார்.

இதனை நம்பி தான் வைத்​துள்ள பழங்​கால நாண​யங்​களின் படங்​களை சைபர் மோசடி நபருக்கு துபே அனுப்​பி​யுள்​ளார். இதற்​காக ரூ.66.75 லட்​சம் வழங்​கு​வ​தாக​வும் செய​லாக்க கட்​ட​ண​மாக ரூ.520 செலுத்​து​மாறும் அந்த மோசடி கும்​பல் துபே​யிடம் கூறி​யுள்​ளது.

இதனை உண்மை என நம்பி துபே பணம் செலுத்​தி​யதும் அந்த மோசடி கும்​பல் பரிசு பணம் நிரம்​பிய பைகளின் வீடியோ, சான்​றிதழ் ஆகிய​வற்றை துபே​யின் வாட்​ஸ்​அப் எண்​ணுக்கு அனுப்​பி​யுள்​ளது. இதனால் சந்​தோஷம் அடைந்த துபே​யிடம் வரி மற்​றும் ஜிஎஸ்டி கட்​ட​ணம் செலுத்த மேலும் பணம் வேண்​டும் என மோசடி கும்​பல் கூறியதையடுத்து உறவினர், நண்​பர் என பலரிடம் கடன் வாங்கி ஆறு பரிவர்த்​தனை​கள் மூல​மாக ரூ.37,000 அனுப்பி வைத்​துள்​ளார்.

இந்த நிலை​யில், மேலும் ரூ.10,000 டெபாசிட் தொகை செலுத்த கோரியபோது​தான் அவரது மனைவி நிர்​மலா​வுக்கு இந்த விஷ​யம் தெரிய​வந்​தது. அவர் ஏமாற்​றப்​பட்​டதை குடும்​பத்​தினர் துபே​யிடம் தெரி​வித்​துள்​ளனர். இதனால் மனம் உடைந்த துபே தனது தந்தை உரிமம் வாங்கி வைத்த துப்​பாக்​கி​யால் சுட்டு தற்​கொலை செய்து கொண்​டார்.

இதுகுறித்து காவல் துறை கண்​காணிப்​பாளர் விவேக் சிங் கூறுகை​யில், “சைபர் மோசடி மற்​றும் தற்​கொலைக்கு தூண்​டு​தல் வழக்கு பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. பழங்​கால நாண​யங்​களுக்கு ஈடாக கோடிக்​கணக்​கில் பணம் தரு​வ​தாக கூறி மோசடி செய்​யப்​பட்​டுள்​ளது. இது​போன்ற சைபர் மோசடி கும்​பல்​களிடம் பொது​மக்​கள் எச்​சரிக்​கை​யாக இருக்க வேண்​டும். பணம் செலுத்​திய வங்கி கணக்​கு​கள் மற்​றும் ஐபி முகவரி​களைக் கொண்டு தீவிர வி​சா​ரணையை மேற்​கொண்​டுள்​ளோம்​” என்​றார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here