துலீப் டிராபி கிரிக்கெட் இறுதிப் போட்டி: இஷான் கிஷன் சதத்தால் கிழக்கு மண்டல அணி முன்னிலை

0
14

 துலீப் டிராபி கிரிக்​கெட் இறு​திப் போட்​டி​யில் கேப்​டன் இஷான் கிஷன் சதத்​தால் கிழக்கு மண்டல அணி முன்​னிலை பெற்​றுள்​ளது. முதல் இன்​னிங்​ஸில் அந்த அணி 4 விக்​கெட் இழப்​புக்கு 385 ரன்​கள் குவித்​துள்​ளது.

துலீப் டிராபி கிரிக்​கெட் இறு​திப் போட்டி சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நேற்று காலை தொடங்​கியது. கிழக்கு மண்​டலம், தென் மண்டல அணி​கள் இறு​திப் போட்​டி​யில் மோதின.

டாஸில் வெற்றி பெற்ற கிழக்கு மண்டல அணி​யின் கேப்​டன் இஷான் கிஷன் தனது அணியை முதலில் பேட்​டிங் செய்ய களமிறக்​கி​னார். தொடக்க ஆட்​டக்​காரர்​களாக களமிறங்​கிய அபிமன்யு ஈஸ்​வரன், வைபவ் சூர்​ய​வன்ஷி ஆகி​யோர் சிறப்​பாக விளை​யாடி அணிக்கு நல்ல தொடக்​கம் தந்​தனர்.

வைபவ் சூர்​ய​வன்ஷி 37 பந்​துகளில் 5 பவுண்​டரி, ஒரு சிக்​ஸருடன் 44 ரன்​கள் குவித்த நிலை​யில் மிலிந்த் பந்​தில், தியாக​ராஜனிடம் கேட்ச் கொடுத்து ஆட்​ட​மி​ழந்​தார்.

இதைத் தொடர்ந்து களத்​துக்கு வந்த ஷிகர் மோகன் அதிரடி​யாக விளை​யாடி அரை சதம் கடந்​தார். அவர் 120 பந்​துகளில் 85 ரன்​கள் குவித்து அவுட்​டா​னார்.

அரை சதத்தை கடந்த நிலை​யில் விளை​யாடிக் கொண்​டிருந்த அபிமன்யு ஈஸ்​வரன் 86 பந்​துகளில் 72 ரன்​கள் சேர்த்த நிலை​யில் ரன்​-அவுட்​டா​னார். சுதீப் குமார் கராமி 6 ரன்​களில் பெவிலியன் வந்​தார்.

இதையடுத்து 5-வது விக்​கெட்​டுக்கு ஜோடி சேர்ந்த கேப்​டன் இஷான் கிஷனும், குமார் குஷக்​ரா​வும் அபார​மாக விளை​யாடி அணி​யின் ஸ்கோரை வெகு​வாக உயர்த்​தினர். அதிரடி​யாக விளை​யாடிய கேப்​டன் இஷான் கிஷன் முதல் நாள் போட்​டி​யிலேயே சதம் விளாசி​னார். மறு​முனை​யில் குமார் குஷக்ரா தனது அரை சதத்​தைப் பூர்த்தி செய்​தார்.

முதல் நாள் ஆட்​டநேர இறு​தி​யில் கிழக்கு மண்டல அணி 79 ஓவர்​களில் 4 விக்​கெட் இழப்​புக்கு 385 ரன்​கள் குவித்​துள்​ளது.

இஷான் கிஷன் 111 ரன்​களும் (14 பவுண்​டரி, ஒரு சிக்​ஸர்), குமார் குஷக்ரா 63 ரன்​களும் (4 பவுண்​டரி, 5 சிக்​ஸர்) குவித்து ஆட்​ட​மி​ழக்​காமல் உள்​ளனர். 5-வது விக்​கெட்​டுக்கு இந்த ஜோடி 26.4 ஓவர்​களில் 144 ரன்​கள் குவித்​துள்​ளது.

தென் மண்டல அணி சார்​பில் சாமா வி. மிலிந்த் 2 விக்​கெட்​களைக் கைப்​பற்​றி​னார். திரிபு​ரான விஜய் ஒரு விக்​கெட்​டைச் சாய்த்​தார்.

கைவசம் 6 விக்​கெட்​கள் மீத​முள்ள நிலை​யில் இன்று 2-ம் நாள் ஆட்​டத்தை கிழக்கு மண்டல அணி தொடர்ந்து விளை​யாட​வுள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here