கன்னியாகுமரி மாவட்டம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, மது போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் சார்பாக போதை விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நாகர்கோவில் குருசடி சர்ச்சில் வைத்து நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா தலைமையில் நடைப்பெற்றது. இதில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் போக்குவரத்து விதிகள் மற்றும் போதை விழிப்புணர்வு குறித்து பேசினார்.