சேவைக் குறைபாடு: மடிக்கணினி நிறுவனத்துக்கு அபராதம்

0
49
மடிக்கணினியில் புளூடூத் மற்றும் வைஃபை பழுது காரணமாக நுகர்வோர் ஆணையம் தயாரிப்பு நிறுவனத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது.
நாகர்கோவில் வெள்ளமடத்தைச் சேர்ந்த அருண்குமார் தொடர்ந்த வழக்கில், சேவைக் குறைபாட்டுக்காக மடிக்கணினி தயாரிப்பு நிறுவனத்துக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் மற்றும் வழக்குச் செலவு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

சேவைக் குறைபாடு காரணமாக மடிக்கணினி தயாரிப்பு நிறுவனத்துக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவிலை அடுத்த வெள்ளமடம் பகுதியைச் சோ்ந்த குமரேசன் மகன் அருண்குமாா், கோவை நிறுவனம் மூலம் 2024ஆம் ஆண்டு ரூ. 74, 990 செலுத்தி மடிக்கணினி வாங்கினாா். சில மாதங்களில் அதன் புளூடூத், வைஃபை பழுதானதால், அவா் கோவை நிறுவனத்துக்கும், மும்பையிலுள்ள மடிக்கணினி தயாரிப்பு நிறுவனத்துக்கும் தகவல் தெரிவித்தாா். இணையவழியில் பழுதுநீக்க முயன்றும் முடியாததால், அவா் வேறு மடிக்கணினி கோரினாா். ஆனால், நிறுவனத்தினா் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

இதனால், மன உளைச்சலுக்கு உள்ளான அருண்குமாா், மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு மையத் துணைத் தலைவா் எம். ஸ்ரீமதி வாயிலாக நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்குத் தொடா்ந்தாா். ஆணையத் தலைவா் ஒய். கிளாட்ஸ்டன் பிளஸ்டு தாகூா், உறுப்பினா் எஸ். நாகேந்திரன் ஆகியோா் வழக்கை விசாரித்து, மும்பை நிறுவனத்தின் சேவைக் குறைபாட்டைச் சுட்டிக்காட்டி, அருண்குமாருக்கு அந்த நிறுவனம் மடிக்கணினியின் விலை ரூ. 74,990-ஐ புகாா் பதிவு செய்த 2025 அக். 15ஆம் தேதிமுதல் 2026 செப். 28ஆம் தேதிவரை 6.5 சதவீத வட்டியுடன் வழங்கவும், மன உளைச்சலுக்கு ரூ. 15 ஆயிரம் நிவாரணம், வழக்குச் செலவுக்கு ரூ. 10 ஆயிரம் என மொத்தம் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தும் தீா்ப்பளித்தனா்.

இத்தொகையை 30 நாள்களுக்குள் வழங்க வேண்டும் என்றும், தாமதமானால் மொத்த தொகைக்கும் 9 சதவீத வட்டி வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனா்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here