கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணியாகுளம் பாறையடியை சேர்ந்தவர் உமா (வயது 42). இவர் வடசேரி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில், “நான் கடந்த 18-3-2025 அன்று கணியாகுளம் சந்திப்பில் சென்றபோது புளியடி சாலை பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அங்கு வந்தார். என்னை தடுத்து நிறுத்தி தகாத வார்த்தைகள் பேசி மிரட்டினார். இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தேன்.
இதுதொடர்பாக விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மணிகண்டன் மீண்டும் என்னை மிரட்டுகிறார். அவர் மீது கொடுத்துள்ள புகார் மனுவை வாபஸ் வாங்கும்படி கூறுகிறார். அவ்வாறு வாபஸ் வாங்கவில்லை என்றால் என்னை கொன்று விடுவதாகவும் மிரட்டுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மணிகண்டன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட உமா, ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய 1-வது வார்டு முன்னாள் தி. மு. க. கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது.