கன்னியாகுமரி மாவட்டத்தில் பருவ மழையின் போது அணைகள் நிரம்புவதை கண்காணித்து உபரி நீரை படிப்படியாக திறந்து விட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பழையாறு செல்லும் சுசீந்திரம் பகுதியில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நீர்நிலை வாய்க்கால், ஓடைகள் குளங்கள் தூர் வார வேண்டும் என்று நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் அழகுமீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.