மக்களுடன் முதல்வர் திட்டம்; நல உதவிகளை வழங்கிய அமைச்சர்

0
166

குமரி மாவட்ட உணவு பொருள் வழங்கல் துறை சார்பில் புதிய மின்னணு அட்டை வழங்குதல் மற்றும் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலஉதவி  வழங்கும் விழா தக்கலையில் நேற்று (23-ம் தேதி) நடைபெற்றது. கலெக்டர் அழகு மீனா தலைமை வகித்தார். பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய் குமார்மீனா முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், தாரகை கத்பட் உட்பட பலர் பேசினர்.

விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து 2 பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி உதவி தொகை, வருவாய்த்துறை சார்பில் இ-பட்டா 84 பேருக்கும், தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முதலீட்டுத் தொகை 16 பயணிகளுக்கு  உதவி தொகைகள் வழங்கினார்.   மேலும் புதிய குடும்ப மின்னணு  அட்டை 458 பேருக்கும் அமைச்சர் வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here