இரவில் மது குடிப்பது மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என ஆராய்ச்சி முடிவு ஒன்று கூறியுள்ளது. 36,000க்கும் மேற்பட்ட வயது வந்தவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் ‘நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்’ இதழில் வெளியிடப்பட்டுள்ளன. அதில், ஒரு நாளின் இறுதியில் தூங்குவதற்கு முன்பாக மதுபானம் அருந்துவது மூளையின் செயல்பாட்டை கடுமையாக பாதிப்பது தெரியவந்துள்ளது. இரவில் மதுபானம் அருந்தாதவர்களுக்கு மூளையின் செயல்பாடு மேம்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது.