நாகர்கோவில்- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் இடலாக்குடி செய்குதம்பி பாவலர் மண்டபத்தின் முன் பகுதியில் சாலை குண்டு குழியுமாக காட்சியளித்து வருகிறது. இதனால் அங்கு அடிக்கடி வாகன விபத்துக்கள் நடக்கின்றன. இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல அரசியல் கட்சியினர் வலியுறுத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி குமரி மாவட்ட நாம் தமிழ் கட்சி சார்பில் நூதன முறையில் நேற்று(செப்.22) போராட்டம் நடந்தது. அப்போது சாலையில் வாழை மரங்களை நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில ஒருங்கிணைப்பாளர் ஜஸ்டின் பெனடிக்ராஜ், மகளிர் மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இதில் நிர்வாகிகள் தீபக் சாலமன், தனுஷ், முத்துகுமார் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.